கோபாஷ்டமி கொண்டாடலாம் வாங்க

கிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் குடும்பத்தினர் தனியே பசுக்களை மேய்க்க அனுப்பிய நாள் ‘கோபாஷ்டமி’ என அழைக்கப்படுகிறது. இந்நாளில் கோமாதா பூஜை செய்வதால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும், ஆரோக்கியம், செல்வ வளம், திருமணம், புத்திர பாக்கியம், வாழ்வில் முன்னேற்றம் என அனைத்தும் கிடைக்கும், நல்ல எண்ணங்கள் ஈடேறும், கர்ம வினைகள் அகலும். இவ்வளவு விஷேஷமான கோபாஷ்டமியன்று கோபூஜை செய்து கொண்டாட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. இந்த நாள் வரும் நவம்பர் 11, 12 (வியாழன், வெள்ளி) தேதிகளில் வருகிறது. அன்று பசுவையும் கன்றையும் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் சந்தனம் வைத்து, தூப தீபம் காட்டி, பூக்கள் அட்சதை போட்டு, தேங்காய், பூ, பழம், வஸ்திரம் வைத்து வணங்கி பசுவுக்கு அகத்திக்கீரை, பசும்புல், பழம், அரிசி, வெல்லம் நிவேதனம் செய்ய வேண்டும். கோபூஜை செய்தவர்கள் அந்த தகவலை 7904179287 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.