ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் இந்திய அறிவியல் படிப்பு மற்றும் ஆய்வு கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் உலோகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த உலோகத்தால் சில நொடிகளில் தனது சேதங்களை தானாகவே சரி செய்து கொள்ள முடியும். மேலும், இந்த உலோகம் மற்றும் உலோகங்களை விடவும் 10 மடங்கு கடினமானது என கூறப்படுகிறது. ஏற்கனவே, தற்போதுள்ள இந்த வகையிலான பல உலோகங்களில் சில குறைகள் உள்ளன. அவை குணமாவதற்கு வெப்பம், ஒளி உள்ளிட்ட ஏதேனும் வேதியியல் உதவி தேவைப்படும். ஆனால், நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய உலோகமானது இத்தகைய குறைபாடுகள் ஏதும் இல்லாதது. எவ்வித உதவியும் இல்லாமல் தானாகவே குணமாகும் திறன் கொண்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த புதிய உலோகத்தை வருங்காலத்தில் போர் விமானங்கள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் கப்பல்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.