திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தி.மு.க அரசின் கீழ் உள்ள ஹிந்து அறநிலையத்துறை நடத்துகிறது. கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கவும் முருகனை கண்டு வழிபடவும் இக்கோயில் கலையரங்கம், வளாகத்தில் தங்கிய பக்தர்களை, தி.மு.க அரசின் உத்தரவின்படி காவல்துறை கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்துத் தள்ளுதல் என அராஜகங்களும் அரங்கேறின. பக்தர்கள் அருகில் உள்ள கடை வாசல்கள் திண்ணைகளில் மழையில் நனைந்தபடி துன்பப்பட்டனர். பக்தர்கள் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்க கோரியும் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை பா.ஜ.கவினரை கைது செய்தனர். இந்து முன்னணியினரும் கோயில் வளாகத்தில் பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. ஹிந்து விரோத தி.மு.க ஆட்சியினரின் அடக்குமுறை ஹிந்துக்களின் கண்டனத்திற்கும் உள்ளானது. இந்து முன்னணி நேற்று மாலை 5 மணியளவில் திருச்செந்தூர் கோயில் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தியது.