அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேசிய அளவில் 2021 தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற வணிகத்தில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. இது கடந்த 10 ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற வர்த்தகத்தைவிட அதிகம். பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளில் திரண்டனர், இது வணிகங்கள் மீண்டும் புத்துயிர் பெற உதவியதுடன் எதிர்காலத்தில் சிறந்த வணிக வாய்ப்புகளுக்கான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது என சி.ஏ.ஐ.டி தெரிவித்துள்ளது. முன்னதாக, தீபாவளி காலத்தில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என சி.ஏ.ஐ.டி மதிப்பிட்டிருந்தது. ஆனால், கணிப்பையும் மீறி வர்த்தக சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.