தி.மு.க ரௌடியிசம்

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும் கடையம் ஒன்றியம் 13வது வார்டு கவுன்சிலராக உள்ளார். தி.மு.க பிரமுகர்கள் உதவியுடன் ஒன்றிய சேர்மேனாக பதவியேற்ற செல்லம்மாள் என்பவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, ஒன்றிய சேர்மேனாக பதவியேற்றுள்ளார். சில காலத்திற்கு முன்பாக இவர், பூமாரி என்ற தேவேந்திரகுல வேளாளர் பெண்ணின் பட்டா நிலத்தையும் அதிகாரிகளின் துணையோடு தனது பெயருக்கு மாற்றியதுடன், ஒரு லட்சம் கொடுத்தால் மீண்டும் பட்டாவை மாற்றி தருவதாக கூறியுள்ளார். இவர் மீது அரசு சார்ந்த சலுகைகள், வேலைகள் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் 20 லட்சத்துக்கும் மேல் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் 50 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகளை அபகரித்ததாகவும் புகார் உள்ளது. இதுகுறித்து காவல்துறை, முதலமைச்சர் தனிப்பிரிவு என புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பூமாரி ‘ஒரு லட்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றித்தருவதாக கூறினார் ஜெயகுமார். நான் எதற்கு பணம் தர வேண்டும். 3 பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் எங்கே போவேன்? அவர், ஒன்றிய சேர்மேனாக பதவி ஏற்றால் நானும் எனது பிள்ளைகளும் கடையம் ஒன்றிய அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று பேட்டி அளித்தார். பூமாரி இப்படி பேட்டி அளித்த இரண்டு நாட்களில் தி.மு.கவினர் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தனது குடும்பக் கட்சியான தி.மு.கவில் உள்ள நிர்வாகிகளின் ரௌடியிசத்தை முதல்வர் வேடிக்கை பார்ப்பாரா அல்லது நடவடிக்கை எடுப்பாரா?