அமெரிக்காவில் தீபாவளி விடுமுறை

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் பி மலோனி தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீபாவளியின் மதம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் தீபாவளியை விடுமுறையாக அறிவிக்ககோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். பிரபல பாரத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கலுக்கு துணை நின்றார். அப்போது கரோலின் பி மலோனி பேசுகையில், ‘இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவின் நாட்டத்தையும் உங்களுடன் கொண்டாடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார். ராஜா கிருஷ்ணமூர்த்தி, ‘இந்த தீபாவளி பண்டிகையில், உலகம் காண விரும்பும் ஒளியாக நீங்கள் இருங்கள், இருளை அகற்ற உங்கள் சமூகத்திற்கு ஒளியாக இருங்கள், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் இந்த சமூகத்தில் ஒளியாக இருங்கள்’ என பேசினார்.