ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆய்வு

பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டு வரும் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தின் பணிகளின் முன்னேற்றத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மூத்த அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ‘ஆத்ம நிர்பார் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா திட்டங்களின் முன்முயற்சியாக இதில் 76 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு தயாரிப்பு பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 24,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சுதேசி விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் 40,000 டன்கள் எடையுடன் 262 மீட்டர் நீளம் இருக்கும். இதில் கடற்படை போர் விமானங்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை யு.ஏ.விகள் உட்பட 35 முதல் 40 விமானங்கள் இடம்பெறும்.