மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் இளைய சகோதரரும், தேசிய மாநாட்டு கட்சியின் மாகாணத் தலைவருமான ராணா, அக்கட்சியில் தனது மூத்த சகாவும், முன்னாள் அமைச்சருமான ஸ்லாத்தியா மற்றும் நூற்றுக்கணக்கான தங்கள் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் இணைந்தனர். பாஜக தேசிய பொதுச் செயலாளரும், ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான தருண் சுக் மற்றும் ரெய்னா ஆகியோர் கட்சிக்குள் புதியவர்களை வரவேற்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரேம் சாகர் அஜீஸ், கமல் அரோரா, முன்னாள் துணை மேயர் தரம்வீர் சிங் ஜம்வால், மாகாண செயலாளர் சவுத்ரி அர்ஷித், சம்பா மாவட்டத் தலைவர் மொஹிந்தர் குப்தா உட்பட பா.ஜ.கவில் இதற்கு முன்பு இணைந்தவர்களில் பெரும்பாலோர் ராணாவுக்கு நெருக்கமானவர்களே.