பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும் என சொல்லப்பட்டது. தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ. 1,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்.