கோயில்களை விடுவிக்க வேண்டும்

தெலுங்கானாவின் ஐதராபாதில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ‘ஹிந்து கோயில்கள் மற்றும் மத ரீதியிலான அனைத்து அமைப்புகள், நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க சட்டம் இயற்ற வேண்டும். அவற்றை ஹிந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, மத்திய அரசிடமும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். பல்வேறு மாநிலங்களில் ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் மத மாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக அளவில் மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. உத்தர பிரதேசம், ஹிமாச்சல் போன்ற மாநிலங்களை போல, தெலுங்கானா அரசும் மத மாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேசிய அளவில் இச்சட்டத்தை நிறைவேற்றும்படி மத்திய அரசிடமும் கேட்டுள்ளோம்’ என்று கூறினார்.