பெண்களுக்கான அனைத்திந்திய சட்ட விழிப்புணர்வு திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்துடன் (நால்சா) இணைந்து தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது. பெண்களுக்கு பல்வேறு சட்டங்கள் வழங்கும் உரிமைகள், தீர்வுகள் குறித்த விழிப்புணர்வை வழங்கி நிஜ வாழ்வின் சவால்களை பெண்கள் எதிர்கொள்ள செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். உச்ச நீதிமன்ற நீதிபதியும் நால்சா செயல் தலைவருமான யு யு லலித், தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மா, உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டதை முதலில் ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிப்பதால் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள பெண்களுக்கு இது சென்று சேரும் என்று நீதிபதி லலித் கூறினார்.