கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கல்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவு சங்கங்களின் கணினிமயமாக்கலை துவங்கிவைத்தார். அப்போது அவர், உத்தரகாண்டின் அனைத்து முதன்மை வேளாண் கடன் சங்கங்களையும் கணினிமயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், மோசடிகள் தடுக்கப்படும். வேளாண் கடன் சங்கங்களை மாவட்ட வங்கிகளுடனும், மாவட்ட வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கிகளுடனும், மாநில கூட்டுறவு வங்கிகளை நபார்டு வங்கியுடனும் நேரடியாக இணைக்க கணினிமயமாக்கல் உதவுகிறது. விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் சங்கங்கள் மூலம் நேரடியாக விவசாயிகளை சென்றடைகிறது. நாட்டிலுள்ள மிகச் சில மாநிலங்களே இதுவரை இப்பணியைச் செய்ய முடிந்துள்ளன என தெரிவித்தார். மேலும், அம்மாநிலத்தில் கூட்டுறவு பயிற்சி மையம், முதலமைச்சர் காசியாரி நலத்திட்டம் போன்றவற்றையும் துவக்கி வைத்தார்.