ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட அதுல் பாஸ்டர் என்பவருக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துள்ளது. இதே போன்றதொரு வழக்கில், வாட்ஸ்அப் குழுவில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஆட்சேபனைக்குரிய வகையில் வெளியிட்டதற்காக அஃபாக் குரைசி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஃபைஸ் ஆலம் கான் அமர்வு, இந்நாட்டின் பிரதமரோ அல்லது அரசியலமைப்பு உயரதிகாரி என யாரையும் மதம் அல்லது ஜாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது என கூறியது.