அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் ஆலயத்தில் பயன்படுத்த, இலங்கையின் பங்களிப்பாக இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த சீதாவனம் என்கிற அசோக வனத்தில் இருந்து கற்களை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கற்கள், ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட உள்ளன. இலங்கையில் ராவணனினால் சிறை பிடிக்கப்பட்டு சீதை சிறை வைக்கப்பட்ட இடம், நுவரிலியா மாவட்டத்தில் உள்ள சீதாஎலியா என்பதாகும். இங்கே சீதா அம்மன் என்று சீதைக்கு கோயில் ஒன்றும் இருக்கிறது. இந்த பகுதியில் இருந்துதான் கற்களை கொண்டு வந்து ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக, இலங்கை அரசின் இரண்டு அமைச்சர்கள், இலங்கை தூதர் துணைத்தூதர் அயோத்தி சென்று ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அரக்கட்டளையின் பொதுச் செயளாலர் சம்பத் ராயை சந்தித்து, அசோக வனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கற்களை பூஜை செய்து ஒட்படைக்கின்றனர்.