பிஞ்சிலே வெம்பி விழுந்திடலாமோ?

“உங்கள் தலைமுறையினர் வெற்று கோஷங்களை முழக்கி பொய்யான வாக்குறுதிகளை அளித்து எம் தலைமுறையினரிடமிருந்து எங்களுக்கு உரிய எதிர்கால உலகின் வளங்களைப் பறித்து விட்டீர்கள். யார் கொடுத்தது உங்களுக்கு இந்த உரிமை” என்று இரண்டு வருடங்கள் முன் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கான ஐ.நா அமைப்பின் மேடையில் ஒரு  16 வயதுப் பெண் ஆவேசமாகப் பேசியது நினைவிருக்கலாம். யார் அந்த பெண்? கிரேதா டின்டின் எலியொனாரா எம்மான் துன்பர் என்கிற கிரேதா துன்பர். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டு பருவ நிலை மாற்ற விளைவுகளைக் குறைக்க தன் தாய்நாடு உட்பட வளர்ந்த நாடு பொறுப்புடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் வீதிக்கு வந்தவர். குறுகிய காலத்தில் மீடியா தயவில் புகழ் அடைந்தவர். இந்த ஆண்டு நம் ஊர் காங்கிரஸ் கட்சி கொடுத்த டூல் கிட் அடிப்படையில் விவசாயப் போராட்டத்திற்கு ஈயடிச்சான் காப்பி ட்விட்டர் பதிவிட்டு அசடு வழிந்த அதிமேதாவி. இவருக்கு இந்த இரண்டு மூன்று வருடங்களில் பண மழை பொழிகிறது, இவரைப் பார்த்து, “செல்லங்களா, உஙகள் தலைமுறையினர் தானே எலெக்ரான்டனிக் கருவிகள், படிக்கும் வகுப்பறை முதல் தாங்கும் விடுதிகள், பயணிக்கும் வாகனங்கள் என எல்லாவற்றிலும் குளிர் சாதன வசதி என்று சுற்றுப்புற சூழல் கேட்டிற்கு வழி வகுக்கிறீர்கள்” என்று விமர்சனத்தை வைக்கிறார்கள். “பெண்ணே, விழிப்படை, வளரப்பார், அதுவரை வாயைப் பொத்திக் கொள் ” என்கிறார்கள்.