பாரத விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு

சான்றிதழ்கள், மருந்துகள், பிராண்டட் பொருட்கள் ஆகியவற்றின் போலிகளை ஒழிப்பதற்காகவும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுப்பதற்காகவும் ஒரு தனித்துவமான ரசாயனப் பண்புகளை கொண்ட, தன்னிச்சையாக ஒளிரும் நானோ பொருட்களின் அடிப்படையிலான, நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பு மையை பாரதத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் சன்யாசி நாயுடு பொட்டு உருவாக்கியுள்ளார். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் சன்யாசிநாயுடு, பொட்டுவின் ஆராய்ச்சிக் குழு, நச்சுத்தன்மையற்ற உலோக பாஸ்பேட் அடிப்படையில் இந்த மையை உருவாக்கியுள்ளது. வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி போன்ற நடைமுறை நிலைமைகளின் கீழ் மிகவும் நிலையானதாகவும் ஒளிரும் பண்பு கொண்டதாகவும் இது இருப்பதாக ‘கிரிஸ்டல் குரோத் அண்ட் டிசைன்’ மற்றும் ‘மெட்டீரியல்ஸ் டுடே கம்யூனிகேஷன்ஸ்’ இதழ்கள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.