மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நேற்று மாநில அரசுகளின் சுகாதார அமைச்சர்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பான உத்திகள், பிரதமர் நரேந்திர மோடியால் திங்களன்று தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் குறித்து விவாதித்தார். அப்போது பாரதத்தில், தகுதியான வயது வந்தோரில் 103 கோடிக்கும் அதிகமானோர் அதாவது, 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியைப் போட்டுள்ளனர். எனினும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, மாநில அரசுகள் 2வது டோஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். மாநிலங்களில் கையிருப்பில் 12.75 கோடிக்கும் அதிகமான பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் உள்ளதும், அவற்றை திட்டமிட்டு சரியாக பயன்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.