மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், அவற்றில் தனியார் இரும்பு உற்பத்தி நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் நிறுவனத்தின் எஃகு பொருட்கள் உற்பத்தி ஆலையும் ஒன்று. இந்நிறுவனம், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள லஸ்சிபோராவில் ஆலையை அமைக்க உள்ளது. வண்ணம் பூசப்பட்ட எஃகு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையைத் துவங்க சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் 40 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக உள்ளூர் மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், வாசிம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.