17 லட்சம் பேர் எல்லையில் கைது

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயன்ற சுமார் 16 லட்சத்து 60 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். இதுவரை நடைபெற்ற கைது நடவடிக்கைகளில் இது சாதனை அளவாகும். இதைத்தவிர, ஹெய்டி, வெனிசுலா, ஈக்வடார், கியூபா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் சுமார் 367,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல் சால்வடாரில் இருந்து 309,000 ஹோண்டுரான்கள், 279,000 குவாத்தமாலாவினர், மற்றும் 96,000 இதர புலம்பெயர்ந்தோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

2012 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும் எல்லை தாண்டும் சுமார் 5 லட்சம் பேர் கைது செய்யப்படுவார்கள். ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றதில் இருந்து இந்த எண்ணிக்கை ஒரு பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. ஆனால், இதே ஜோ பிடன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது,  ​​முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளை ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தார், குடியேற்றக் கொள்கையில் மனிதாபிமான அணுகுமுறையை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அவர், டிரம்பின் முடிவுகளை இன்னும் கடுமையாக செயல்படுத்தி வருகிறார்.