அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஆயுதக் குவிப்பைத் தொடர்ந்து பாரதமும் எல்லப்பகுதிகளில் ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட எல் 70 விமான எதிர்ப்பு பீரங்கிகள், போபர்ஸ் பீரங்கிகள், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லகுரக எம் 777 ஹோவிட்ஸர்கள் இங்கு நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. எல் 70 பீரங்கிகள், டிரோன்கள், ஆளில்லா போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விமானங்களை வீழ்த்தும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வானிலையிலும் துல்லியமாக இயங்க தானியங்கி இலக்கு கண்காணிப்பு திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தெர்மல் இமேஜிங் கேமரா, லேசர் ரேஞ்ச் ஃபைண்டர், ரேடார் போன்றவையும் பொருத்தப்பட்டு உள்ளன. ஆயத்தத்தின் உயர் நிலைகளின் ஒரு பகுதியாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த ராணுவ பிரிவினர், தினசரி கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், எல்லை பிரச்சனை தொடர்பாக, மற்றொரு பேச்சுவார்த்தை நடத்த சீனாவும் பாரதமும் ஒப்புக்கொண்டுள்ளன.