சர்ச்சை விளம்பரம்

சியட் நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ள அமீர்கான், தெருக்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இச்சூழலில், கர்நாடக பா.ஜ.க எம்.பி அனந்த்குமார் ஹெக்டே, சியட் நிறுவனத் தலைவர் ஆனந்த் வர்தன் கோயங்காவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘உங்கள் நிறுவன விளம்பரத்தில் அமீர்கான் மக்களுக்கு தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். அது ஒரு நல்ல செய்திதான். ஆனால், வெள்ளிக் கிழமைகளில் நமாஸ் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமிப்பதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு ஏற்படும் இடைஞ்சல் போன்றவற்றையும் நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், மசூதிகளில் உள்ள ஒலிப் பெருக்கிகளில் அசான் ஓதும் உரத்த சத்தம் அனுமதிக்கப்பட்ட ஒலி வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. இதனால், முதியோர், நோய்வாய்பட்டோர், மாணவர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உங்கள் விளம்பரங்களில் ஒலி மாசுபாடு பிரச்சினையையும் முன்னிலைப்படுத்த வேண்டும். உங்களின் இந்த விளம்பரம், ஹிந்துக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துகிறது எனவே விளம்பரங்களில் கவனம் தேவை என கூறியுள்ளார்.