சர்வதேச சூரியசக்தி கூட்டணியின், நான்காவது பொதுக் கூட்டத்தை மத்திய அமைச்சரும், சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணியின் தலைவருமான ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார். இதில் 106 நாடுகள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பின்பற்றுவது கடந்த சில வருடங்களாக வேகமெடுத்துள்ளது. நிலையான எரிசக்திக்கான உலகளாவிய அணுகல், நிலக்கரி அற்ற எரிசக்தித் துறைகளை அடைய சூரிய மின்சக்திதான் சாத்தியமான வாய்ப்பு. 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய பாரதம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலகம் முழுவதும் மின்சாரம் கிடைப்பது குறைவாக உள்ள 800 மில்லியன் மக்களுக்கு, சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியால் மின்சாரம் கிடைக்கச் செய்ய முடியும். இதில் உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என கூறினார்.