ஏ.பி.வி.பி தியாகிகள் கணக்கெடுப்பு

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பின் இரண்டு நாள் மத்திய செயற்குழு கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதன்முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.வி.பியின் தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி, ‘இவ்வாண்டு ஆகஸ்ட் 15 அன்று, ஏ.பி.வி.பி ,நாடு முழுவதும் 1,09,635 இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி லட்சக்கணக்கான மக்களை சுதந்திரதின விழாவில் பங்கேற்க வைத்தது. இன்டர்ன்ஷிப், பொது அறிவுப் போட்டி, மூவர்ணக்கொடி யாத்திரை போன்ற பல்வேறு செயல்பாடுகள் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்படும். மேலும், பாரத சுதந்திர போராட்டத்தில் பல தியாகிகள் பங்கேற்றனர், ஆனால் அவர்களின் பங்களிப்புக்கு உரிய பாராட்டு வழங்கப்படவில்லை. இந்த சுதந்திரத்தின் 75வது ஆண்டில், ஏ.பி.வி.பி அத்தகைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை தேசத்தில் உள்ள குடிமக்களுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கும். இதற்காக, தேசம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று தியாகிகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என தெரிவித்தார்.