இல்லம் தேடி கல்வித் திட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 8ம்  வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் கற்றல் திறன்களில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய, ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக 8 மாவட்டங்களில் பரிசோதனை முறையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த தன்னார்வலர்கள் 1 முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி பயிற்சி அளிப்பர். இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான கல்வி பயின்றவர்கள் 6 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி அளிப்பர். இதில் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்ய, https://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registration என்ற தனி இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.