குஷிநகர் விமான நிலையம்

உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகரில் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், உ.பி கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புத்தரின் மகா பரிநிர்வானஸ்தானம், லும்பினி, சாரநாத், கயாவை சென்று தரிசிக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களின் புனித சுற்றுலாவின் மையப் புள்ளியாக இது அமையும். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் வாழை பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், காளான் போன்ற தோட்டக்கலை பொருட்கள் உட்பட பல்வேறு ஏற்றுமதிகளையும் அதிகரிக்கும். இலங்கையின் கொழும்பிலிருந்து 125 முக்கியஸ்தர்கள் மற்றும் பௌத்த மத துறவிகளை ஏற்றிவரும் விமானம் இந்த விமான நிலையத்தில் முதலில் தரையிறங்குகிறது.