இந்திய ராணுவம் இஸ்ரேலிய தயாரிப்பான அதி நவீன ஹெரோன் மார்க் 1 என்ற ஆளில்லா உளவு விமானத்தை சீனாவுடனான எல்லையை கண்காணிக்க பயன்படுத்தி வருகிறது. அசாமின் மிஸ்ஸாமரியில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்த விமானத்தை இந்திய இராணுவம் இயக்குகிறது. ஹெரோன் மார்க் 1 உளவு விமானம், சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து 30 மணி நேரத்திற்கும் அதிகமாக பறக்கும். இதில், பகல், இரவு நேர கண்காணிப்பு கேமரா, மோசமான வானிலையிலும் செயல்படும் ரேடார், அதிநவீன ஏவியோனிக்ஸ், லேண்டிங் கியர், தானியங்கி டேக் ஆப், லேண்டிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது முழு நிலப்பரப்பையும் கண்காணிக்கும்.