ராணுவ நிலங்கள் டிஜிட்டல் மயம்

சமீபத்திய ஆய்வு தொழில்நுட்பங்கள், தொலைநிலை உணர்தல் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எ.ஸ்) ஆகியவற்றை பயன்படுத்தி ராணுவ நில எல்லைகளை வரைபடமாக்குதல் குறித்த பயிற்சி திட்டத்தை இந்திய ராணுவ எஸ்டேட் சேவைகள் இயக்குநரகத்தின் (டி.ஜி.டி.இ) அலுவலர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்காக பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் தொடங்கி வைத்தார். காணொலி மூலம் நிகழ்ச்சி துவக்கப்பட்ட இப்பயிற்சி, ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்திறன் மையத்தில் முதல்கட்டமாகத் தொடங்கியது. 18 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களுடன் கூடிய டி.ஜி.டி.இ, நாட்டின் மிகப்பெரிய நில மேலாண்மை அமைப்புகளில் ஒன்று. தொலைதூர கடினமான நிலப்பரப்புகள், நகர்ப்புற நிலங்கள் என பல்வேறு வகைகளிலான நிலங்களை இது கொண்டுள்ளது. அவை இதன் மூலம் நவீன முறையில் டிஜிட்டல் மயமாக்கப்படும்.