சென்னை ஐ.ஐ.டிக்கு விருது

எல்.இ.டி விளக்குகளில் பயன்படுத்தத்தக்க வெண்ணிற ஒளி உமிழ்வான்களை சென்னை ஐ.ஐ.டி ஆய்வாளர்கள் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர். வழக்கமான எல்.ஈ.டி பொருட்கள் வெண்மை ஒளியை வெளியிடாது. மஞ்சள் பாஸ்பருடன் நீல எல்.இ.டி பூச்சு அல்லது நீலம், பச்சை மற்றும் சிவப்பு எல்.இ.டிக்களை இணைப்பது போன்ற செயல்முறைகள் வழியாகவே வெண்மை ஒளி உருவாக்கப்படுகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் காப்புரிமை பெற்றுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ரூ.30 லட்சம் மதிப்புள்ள விருதினை வென்றுள்ளது. இந்த கண்டுபிடிப்பால் மின்செலவு கணிசமாக குறையும். ‘மேக் இன்’ இந்தியா திட்டத்திற்கு இது பங்களிப்பு செய்யும். எதிர்காலத்தில் ஒளி உமிழ்வான் தொழில்நுட்பத்தில் பாரதம் முன்னிலையில் இருக்கும். இந்த எல்.இ.டி விளக்குகளை பொதுவான பயன்பாடு தவிர திரவப்படிக பின்புல விளக்குகள், அலைபேசிக்கான உள்விளக்கு, மருத்துவம், தகவல் தொடர்பு சாதனங்களுக்கான விளக்குகளாக பயன்படுத்த முடியும். விருதுத் தொகையை எங்களின் புதிய எல்.இ.டி விளக்குகளை உற்பத்திக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன், இயற்பியல் துறை பேராசிரியர் பி.ரஞ்சித் குமார் நந்தா தெரிவித்தனர்.