துர்கை சிலை உடைப்பு

நமது அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங்கின் பிரிங்கிபஜார் பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஷம்சனேஷ்வர் சிவன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த துர்கை சிலை சில முஸ்லிம் அடிப்படைவாதிகளால் உடைக்கப்பட்டது. இச்சம்வத்தை அடுத்து கோட்வாலி காவல்நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட துலால், கபீர், இக்பால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இது அந்நாட்டில் கடந்த சில நாட்களில் பதிவான மூன்றாவது நாசகார சம்பவம்.  ஒவ்வொரு ஆண்டும் வங்கதேச முஸ்லிம் அடிப்படைவாதிகள் அங்கு துர்கை சிலைகளை உடைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர். காவல்துறையும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை என பங்களாதேஷ் ஹிந்து ஒற்றுமை கவுன்சில் புகார் கூறியுள்ளது.