சமுதாய நல்லிணக்கத் தினம்

நமது பாரத தேசம் ‘வசுதைவ குடும்பகம்’ என்று உலகையே ஒரே குடும்பமாக பார்க்கும் தன்மைக் கொண்டது. ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் அந்த இறைவனே அனைத்து உயிர்களிலும் வாசம் செய்கிறான் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளது. அப்படி இருக்கும் நம் தேசத்தில் ஆங்காங்கு தீண்டாமை எனும் கொடிய நோய் நிலவுகிறது. இதனை கலைவதும் சமுதாய நல்லிணக்கத்தை கடைபிடிப்பதும் நம் தலையாய கடமை. இதனை வலியுறுத்தும் விதமாக, உலகின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்புகளில் முதன்மையான பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) அதன் ஸ்தாபகர் தத்தோபந்த் பாபுராவ் தெங்கடி அவர்களின் நினைவு தினமான அக்டோபர் 14 அன்று ‘சாமாஜிக் சமரசதா’ எனப்படும் சமுதாய நல்லிணக்க தினமாக கொண்டாடுகிறது.