உத்தர பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதத்தில், உமர் கௌதம், முப்தி காசி, ஜஹாங்கிர் காஸ்மி ஆகியோரை கைது செய்ததன் மூலம் உலகளாவிய அமைதி மையம் என்ற பெயரில் நட்த்தப்பட்ட மிகப்பெரிய முஸ்லிம் சட்டவிரோத மதமாற்ற மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், இதில், உள்ள பாகிஸ்தான், அரபு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச தொடர்பு, பயங்கரவாத தொடர்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம், ஏழைகள், ஊனமுற்றோரை மூளைசலவை செய்து மதமாற்றம் செய்தல், மற்ற மதங்களின் மீது வெறுப்பை பரப்புதல், லவ் ஜிஹாத் தூண்டுதல்கள் போன்ற பல விஷயங்கள் வெளியாகத் துவங்கின.
இவ்வழக்கை விசாரித்து வரும் உத்தர பிரதேச பயங்கரவாதத் தடுப்பு காவல்துறை முக்கிய குற்றவாளியான சித்திகி, அவரது மூன்று கூட்டாளிகளான இத்ரிஸ் குரேஷி, சலீம், நாக்பூரை சேர்ந்த ஆலம், பூரியா பந்தோ, அர்ஸ்லான், முஸ்தபா குஜராத் தொழிலதிபர் சலாவுதீன் ஜெயினுதீன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரோஸ் ஷா, கான்பூரை சேர்ந்த குணால் அசோக், தீரஜ் ஜக்தப் ஏ.கே.தீரஜ் தேஷ்முக் என பலரை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த சட்டவிரோத மத மாற்ற வழக்கில் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த சர்பராஸ் அலி ஜாஃப்ரி என்பவரை கைது செய்துள்ளது.