பரிசு பொருட்கள் ஏலம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் இவ்வாண்டு மின் ஏலத்தில் விற்கப்பட்டன. கடந்த செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை இந்த ஏலம் நடத்தப்பட்டது. இதில் கிடைக்கும் பணம் முழுவதும் கங்கையை தூய்மைப்படுத்தும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்வருடம் இந்த ஏலத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் ஈட்டி ரூ. 1.5 கோடி என்ற அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. சர்தார் படேலின் சிற்பத்திற்கு அதிகமான ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தவிர பவானி தேவியின் கையொப்பமிடப்பட்ட வாள் ரூ .1.25 கோடி, சுமித் அன்டிலின் ஈட்டி ரூ.1 கோடியே 20 ஆயிரம், 2020 பாராலிம்பிக் குழு கையெழுத்திட்ட அங்கவஸ்திரம் ரூ. 1 கோடி, லவ்லினா போர்கோஹைனின் குத்துச்சண்டை கையுறைகள் ரூ. 91 லட்சம் என விலை போயின. இந்த மின் ஏலத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரிகள்; வாரணாசியின் ருத்ராக்ஸ் அரங்கத்தின் மாதிரி, வினாயகர் சிற்பம் உள்ளிட்ட 1348 பரிசு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றிற்கு சுமார் 8,600 ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்டன.