வி.ஹெச்.பி அமைப்பின் இணை பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரான்சில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள், கிறிஸ்தவ பாதிரிகளால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் சர்ச்சுகளின் தவறுகள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டு இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சர்ச் ஆஃப் பிரான்ஸ் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து சர்ச்சுகளும் பாலியல் துஷ்பிரயோகம், விபச்சார குற்றச்சாட்டுகளால் நிரம்பியுள்ளன. அவர்களும் முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தனர், ஆனால், உண்மை வெளியானதும் மன்னிப்பு கேட்டனர். மேற்கத்திய சமூகம் சர்ச்சுகள் அமைக்கப்பட்ட நோக்கத்தில் இருந்து விலகிவிட்டது. மக்களும் வெளியேறுகின்றனர். இது, அவர்களின் சுய பகுப்பாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான நேரம். அவர்கள் பாரதம் போன்ற நாடுகளில் மத மாற்ற சதித்திட்டங்களை உடனடியாக நிறுத்தி, தங்கள் பாதிரிகளை சீர்திருத்த வேண்டும் .
பாரதத்தில் உள்ள சர்ச்சுகளிலும் இவை நடக்கின்றன. அக்காலம் முதல் தற்போதுவரை அவை அவமானகரமான சம்பவங்களால் நிறைந்துள்ளது. சுவாமி லட்சுமணானந்தர் (ஒடிசா), பால்கர் (மகாராஷ்டிரா) சாதுக்களின் கொலைகள் என சர்ச்சுகளின் வரலாறு பல கோரமான, ரத்தம் தோய்ந்த பக்கங்களால் நிரம்பியுள்ளது.
பாரதத்தில், அவர்கள் பண பலம், மோசடி, கவர்ச்சிகளால் மதம் மாற்றுகின்றனர். எண்ணற்ற கன்னியாஸ்திரிகள் பாலியல் துஷ்பிரயோகங்களும் நடைபெற்று வருகின்றன. இதனை எதிர்த்து போராட்டங்களும் நடக்கின்றன. கிறிஸ்தவ அனாதை இல்லங்களில் பாலியல் துஷ்பிரயோகம், முறைகேடுகள், வெளிநாடுகளுக்கு அனாதைக் குழந்தைகளை கடத்துதல், விற்பனை என பல சம்பவங்களும் அம்பலமாகியுள்ளன.
பல மாநில அரசுகள் நக்சலைட்டுகள், பயங்கரவாத அமைப்புகளுடனான சர்ச்சுகளின் தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளன. இச்செய்திகள் வெளியாகும்போது, துரதிருஷ்டவசமாக சர்ச்சுகள் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக குற்றவாளிகளை பெருமைப்படுத்துகின்றன.
நியோகி கமிஷன் போன்ற நாடு தழுவிய விசாரணை கமிஷனை அமைத்து பாரதத்தில் சர்ச்சுகளின் சதித்திட்டங்களை விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனைகள் வழங்க வேண்டும். பாரதத்தின் கலாச்சார பொதுவுடைமை, சகோதரத்துவத்திற்கு அப்பாற்பட்ட இத்தகையவர்களின் மத மாற்றங்களை நிறுத்த மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகிறோம்.
சர்ச் நிர்வாகிகள் தங்கள் பாவங்களை தானாக முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும். சட்டவிரோத மதமாற்றங்கள், பிற சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையெனில் வி.ஹெச்.பி அவர்களின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தவும் சட்டவிரோத மதமாற்றங்களை நிறுத்தவும் ஒரு பெரிய இயக்கத்தை துவங்கும்’ என தெரிவித்துள்ளார்.