தேசிய காவல் நினைவிடத்தில் இருந்து 4 வது கட்ட சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த இந்தோ திபெத் எல்லைக் காவல்படை (ஐ.டி.பி.பி) இயக்குனர் ஜெனரல் சஞ்சய் அரோரா, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சமீபத்தில் 100 சீன ராணுவத்தினர் எல்லைத் தாண்டிவந்ததை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லைப்பகுதிகளில் அவ்வப்போது எல்லை மீறல்களை சீனா நடத்துகிறது. ஆனால், உடனுக்குடன் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எல்லையின் ஒருமைப்பாட்டைக் காப்பதே எங்கள் பணி. நாங்கள் முன்பு பலமுறை எங்கள் திறன்களைக் காட்டியுள்ளோம். ஐ.டி.பி.பியின் திறன் மற்றும் தயார்நிலை திருப்திகரமாக உள்ளது. கடந்த ஆண்டு ஐ.டி.பி.பி அதன் தயார் நிலையையும், திறனையும் காட்டியது. எதிர்காலத்திலும் அதே உணர்வுடன் நாட்டுக்கு சேவை செய்யும் என தெரிவித்தார்.