சட்டத் திருத்தம் முன்மொழிவு

வன நிலத்தை வனமற்ற பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெறுவதற்காக தற்போதைய சட்ட சூழ்நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல பாதுகாப்பு திட்டங்கள் தாமதமாகின்றன. இதற்காக தற்போதுள்ள வனப்பாதுகாப்பு சட்டத்தில் (எப்.சி.ஏ) சில சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த சட்டத் திருத்தங்களின்படி, தேசிய பாதுகாப்பு, எல்லைப்புற உள்கட்டமைப்பு திட்டங்களில் பணிபுரியும் அரசின் பார்டர் இன்ஃப்ரா போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இதனால், எல்லை பாதுகாப்பு மேம்படும். சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் இது குறித்த கருத்துகள், ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.