உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் விவசாய சட்டத்திற்கெதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் விவசாய போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்கியதில் பா.ஜக.வினர் உட்பட 8 பேர் இறந்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியின் எல்லையில் யாரையும் காவல்துறை அனுமதிக்கவில்லை. ஆனால், வலுக்கட்டாயமாக அங்கு சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஊருக்குள் நுழைய முயன்றார். காவல் அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பிரியங்கா காந்தி, ‘உங்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து வாரண்டை பெற்று வாருங்கள். என்னை காவல்துறை வாகனத்தில் அமர வைக்க முயற்சி செய்கின்றீர்களா? அப்படி செய்தால் நீங்கள் என்னை நீங்கள் என்னை கடத்த முயற்சிக்கிறீர்கள், தாக்கவும் துன்புறுத்தவும் முயற்சி செய்கின்றீர்கள், எனக்கு தீங்கிழைக்க முயற்சித்தீர்கள் என நான் வழக்குப் போடுவேன். அவற்றை நீங்கள் சந்திக்க நேரிடும்’ என மிரட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது.