கோயில் சிலைகள் ஆய்வு

சென்னை உயர் நீதிமன்ற குற்ற புலனாய்வு வழக்கில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் களவு தொடர்பான வழக்கில் 5வது பிரதிவாதியாக தொல்லியல்துறை ஆணையர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தொல்லியல் துறையின் அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் காலமுறை அடிப்படையில் சிலைகள் மையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 28 அலுவலர்களை கொண்டு 12 குழுக்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கும் சென்று கோயில்களில் உள்ள பழமையான கடவுள் சிலைகளில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, பாதுகாப்பாக உள்ளதா, திருடு போயுள்ளதா என ஆய்வு செய்வார்கள். இந்த குழுக்களுக்கு இதற்கான அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.