தி.மு.கவின் ஸ்டிக்கர் திட்டம்

எதிர் கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசுவது, ஆட்சியில் இருக்கும்போது வேறு ஒன்று பேசுவது, தான் கையெழுத்திட்ட மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தானே போராடுவது, கச்சத்தீவு தாரைவார்ப்பின்போது தலையாட்டிவிட்டு, பிறகு அதனை மீட்போம் என்பது போன்ற பல மாறுபாடான செயல்பாடுகளுக்கு பேர் பெற்ற கட்சி தி.மு.க. அவ்வகையில், கடந்த 2020ல் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதுரவாயல் மேம்பாலம் இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றப்படும் என்றார். அப்போது ‘சென்னை மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவது அதன் கட்டுமானத்தைக் குலைத்து காலதாமதத்தை ஏற்படுத்தும், போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல்’ என விமர்சித்தவர் ஸ்டாலின். ஆனால், தற்போது, ‘பாரதத்திலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலை அமையவுள்ளது. தமிழகத்தின் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலையை ஈரடுக்குப் பாலமாக அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதத்தில் நிறைவடையும்’ என தி.மு.க தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மத்திய அரசின் திட்டங்கள் மீது வழக்கம்போல, தி.மு.கவின் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையே என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஈரடுக்கு சாலைகூட, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதியில்தான் கட்டப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.