முஸ்லிம் மதகுரு கைது

உத்தர பிரதேசத்தின், பதேபூரில் உள்ள ஒரு மசூதியின் கமிட்டி உறுப்பினர் அப்துல் மஜீத் கான் என்பவர், அதே மசூதியில் உள்ள மற்றொரு மதகுருவான ஹஃபீஸ் பிரோஸ் ஆலம் குறித்து ஒரு புகார் தெரிவித்தார். அதில், ‘ஹஃபீஸ் பிரோஸ் ஆலம், முஸ்லிம் இளைஞர்களுக்கு பெண்களை திருமணத்திற்காக மதமாற்றம் செய்வது, பாலியல் சுரண்டல் போன்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார். இதனால் அவர்களுக்கு பணமும் இன்பமும் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்கிறார்.

ஒரு முஸ்லீம் இளைஞன் காதலித்து ஏமாற்றிய ஒரு பிராமணப் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைத்தார். அவர் நேபாளத்தைச் சேர்ந்தவராக இருக்கலம். அவர் இங்கு வந்தபோது தன்னை குறித்த எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், தற்போது, ​​அவர் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தையும் முறைகேடாக பெற்றுள்ளார். பதேபூர் மசூதியில் 15 ஆண்டுகள் வேலை செய்தார். அவரது ஆட்சேபனைக்கு உரிய போதனைகள் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என தெரிவித்திருந்தார். இதனையடுத்து பதேபூர் காவல்துறையினர், ஹபீஸ் ஃபிரோஸ் ஆலத்தை பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.