இது பாரதத்திற்கான காலம்

பாரத அமெரிக்க உத்திசார் கூட்டுறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொலி கூட்டத்தில் பேசிய மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன், ‘மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக உலகின் பிற நாடுகளால் எட்டமுடியாத பொருளாதார வளர்ச்சியை பாரதம் விரைவில் எட்டும். குறிப்பாக 2023ம் நிதி ஆண்டில் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டும். பொருளாதார சீர்திருத்தங்களின் பலனாக அடுத்த சில ஆண்டுகளில் 7 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியை பாரதம் எட்டும். வரவுள்ள இந்த 10 ஆண்டுகள் பாரதத்திற்கானது. இதில் 7 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை பாரதம் எட்டுவது உறுதி’ என்று பேசினார்.