நாடு முழுவதுமுள்ள கிறிஸ்துவ சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உரையாடினார். அப்போது அவர், ‘ஆத்திகர்கள், நாத்திகர்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில் கட்டாய மத மாற்றம் எந்த ஒரு மதத்தையும் பரப்பும் வழிமுறை அல்ல. ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் மத, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளின் பாதுகாப்பு பாரதத்தில் உள்ளது. பாரதம் என்றும் மதவெறிக்கும் சகிப்பின்மைக்கும் உட்படாது. உலகில் அனைத்து மதங்களின் பண்டிகைகளும் ஒன்றாகக் கொண்டாடப்படும் ஒரே தேசம் பாரதம். பகிரப்பட்ட இந்தக் கலாச்சாரப் பாரம்பரியம், ஒன்றிணைந்து வாழ்வதின் பாரம்பரியம் ஆகியவற்றை நாம் பலப்படுத்த வேண்டும். ஒற்றுமை, நல்லிணக்கத்தைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் பாரதத்தின் ஆன்மாவைக் காயப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது வலிமையின் அழகு. உலகனைத்தும் ஒரு குடும்பம் எனும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கலாச்சாரத்தில் பாரதம் நபிக்கை கொண்டுள்ளது.’ என கூறினார்.