உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமாணிய சுவாமி மனு

மத சார்பற்ற அரசு என கூறிக்கொண்டு, மாற்று மதங்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுவது, அதிகார பலத்தை பயன்படுத்தி ஹிந்து மத விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பது தி.மு.க தலைமையிலான தமிழக அரசின் வாடிக்கை. அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவு இதற்கு சிறந்த உதாரணம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான முறையான வேத கல்வி, மத சம்பிரதாயங்களை முறையாக பின்பற்றுதல் போன்ற பல நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியது தி.மு.கவின் ஹிந்து விரோத மனநிலையை நன்றாகவே எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில், தழிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக சுப்ரமணிய சுவாமி தரப்பில் வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா உச்ச நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது. கோயில் நிர்வாகம்தான் நியமிக்க வேண்டும். இதில் அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.