உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் தலைவராக பணியாற்றி வரும் முகமது இப்திகருதீன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்த இரண்டு வீடியோக்களை அங்குள்ள ‘மத் மந்திர்’ ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய துணைத் தலைவர் பூபேஷ் அவஸ்தி வெளியிட்டார். அதில் ஒரு வீடியோவில் முகமது இப்திகருதீனின் ஒரு முஸ்லிம் மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொள்வது குறித்து மக்களுக்கு மத பிரசங்கம் செய்கிறார். மற்றொறு வீடியோவில் அரசு அவருக்கு அளித்த அதிகாரபூர்வ இல்லத்தில், இப்திகருதீன் தரையில் அமர்ந்துள்ளார். ஒரு முஸ்லிம் பேச்சாளர் தீவிரவாத கருத்துகள் மிகுந்த மதபாடங்களை எடுத்துரைக்கிறார். இந்த வீடியோக்கள், கான்பூர் நகர காவல்துறை ஆணையரிடம் விசாரணைக்காக வழங்கப்பட்டது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை, கருத்துகள், குற்றச்சாட்டு குறித்து ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, ‘இது ஒரு தீவிரமான விஷயம். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.