ஆந்திர அரசுக்கு பின்னடைவு

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு சிறப்பு அழைப்பாளர்களாக 52 உறுப்பினர்களை அம்மாநில அரசு நியமித்தது. அரசியல் ரீதியான அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பா.ஜ.க தலைவர் ஜி.பானுபிரகாஷ் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் எம் உமா மஹேஸ்வர நாயுடு, ஹிந்து ஜனசக்தி சம்க்ஷேமா சங்கத்தின் நிறுவனர் கே.லலித்குமார் ஆகியோர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, 1987 ஆந்திர பிரதேச அறக்கட்டளை மற்றும் ஹிந்து மத அமைப்புகள் மற்றும் நன்கொடைகள் சட்டத்தின் பிரிவு 96க்கு முரணானது, அரசியலமைப்பின் 25வது சட்டப் பிரிவை மீறும் வகையில் உள்ளது என தெரிவித்தனர். இதனையடுத்து, ஆந்திர அரசின் நியமனங்களுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.