வங்கதேச ஊடுருவல்கள்

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில்தான் வங்கதேசத்தினர் ஊடுருவல் மிக அதிகம். இதேபோல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வங்க தேசத்தவர்கள், ரோஹிங்கியாக்கள் அதிகம் பேர் ஊடுருவி உள்ளனர். பெரும்பாலும் இவர்கள், புறநகர் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள பல முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் இதற்குத் துணையாக உள்ளனர். சமீபத்தில் திருப்பூர், ஈரோடு பகுதிகளில் 31 வங்கதேசத்தினர் கடந்த மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, போலி ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட மேற்கு வங்க முகவரிகள் அடங்கிய ஆதார் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கதேசத்தினர் ஊடுருவலை கண்டறிய, திருப்பூர், ஈரோடுக்கு தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர்கள் யார், ஆவணங்கள் பெற உதவியவர்கள் யார் என விசாரணை நடப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, மற்றொரு வழக்கில் ‘வெளிநாட்டவரை திருப்பி அனுப்புவதில் மத்திய உள்துறையின் வழிமுறைகளைப் பின்பற்றுவதில், மெத்தனம் காட்டப்படுகிறது. பலர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். போலி ஆவணங்கள் வாயிலாக இந்திய அடையாள அட்டையை பெற்றுள்ளனர். அவர்களை கண்டறிந்து திருப்பி அனுப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாட்டவர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிப்பிரிவை டி.ஜி.பி ஏற்படுத்த வேண்டும்’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.