ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாடகை நிர்ணயம் தொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும். அது குறித்து அனைத்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மறு நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கோயில் சொத்துக்களின் வாடகையை அறநிலையத்துறை சட்டப்படி அமைக்கப்பட்ட குழுவே நிர்ணயிக்கும். அப்பகுதியின் சந்தை மதிப்புக்கு ஏற்ப நியாயமான வாடகையை குழு நிர்ணயிக்கும். அந்த வாடகையே செல்லத்தக்கது. நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள் நிர்ணயித்த வாடகையால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து ஹிந்து அறநிலையத்துறையில் மேல்முறையீடு செய்யலாம்’ என உத்தரவிட்டுள்ளது.