ஐ.நா., பொது சபை கூட்டம், ‘குவாட்’ அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பாரதத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் நரேந்திர மோடி, இன்று நேரில் சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். இவர்கள் இருவரிடமும் ஏற்கனவே பிரதமர் மோடி பலமுறை தொலைபேசி வாயிலாக கொரோனா நிலவரம், ஐ.நா, குவாட், சீனா, ஆப்கானிஸ்தான் என பல்வேறு விஷயங்கள் குறித்து பலமுறை பேசியுள்ளார். இதைத் தவிர ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் ஐ.நா பொதுசபை கூட்டத்திற்கு வருகை புரிவார்கள் என்பதால் பலருடனான கலந்துரையாடல்கள் இந்த பயணத்தில் இடம்பெறும். உலகளாவிய கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு இந்த உலகத் தலைவர்கள் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.