திருமலை ஏழுமலையானை தரிசிப்பதற்காக அடுத்த மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை, 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட சில தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதால், இணைய பதிவின்போது பக்தர்களுக்கு இனி எந்த பிரச்னையும் ஏற்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.