கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொண்டர்களிடையே வினியோகித்த உட்கட்சி நோட்டீசில், கேரளாவில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ‘சிறுபான்மை வகுப்புவாதம்’ என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில், ‘முஸ்லிம்கள் கல்லூரிகளில் படித்த இளம் பெண்களை பயங்கரவாத பாதைக்கு இழுக்க முயற்சிக்கின்றனர். மாநிலத்தில் வகுப்புவாத ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பயங்கரவாத சக்திகள் முஸ்லிம் அமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ளன. கேரளாவில் தலிபான்களுக்கு ஆதரவான விவாதங்கள் நடக்கின்றன. இப்பிரச்சனைகள் குறித்து தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இளைஞர்களையும் இளம் பெண்களையும் வகுப்புவாதம், பயங்கரவாத சித்தாந்தங்களுக்குள் இழுக்கின்றனர். கம்யூனிச மாணவர் சங்கம், இளைஞர் அமைப்புகள் இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.