கொரோனா ஆறுதல் செய்தி

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் என்.சி.டி.சி’யின் இயக்குநர் சுஜீத் சிங், ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘ஆரம்ப காலகட்ட்த்தில் கொரோனா எங்கள் கணிப்புகளையும் தாண்டி மிக வேகமாக வளர்ந்தது. எனினும் அடுத்த ஆறு மாதங்களில் அது, ‘என்டமிக்’ எனப்படும் ஒரு சிலருக்கு மட்டுமே அல்லது ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ள தொற்றாக மாறிவிடும். வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தடுப்பூசி போடப்பட்டவர்களும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கேரளா தற்போது கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனா கிருமியின் புதிய மாறுபாடு வகைகள் எதுவும் பாரதத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மாறுபாடுகள் வந்தாலும், தடுப்பூசி, இயற்கையாக உடலில் உருவான ஆன்டிபாடிகளால் அவைகளால் ஒரு பெரிய மூன்றாவது அலையை உருவாக்க முடியாது. எனினும், வருவது திருவிழா காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்’ என தெரிவித்தார்.